என் மலர்

  செய்திகள்

  மத்திய அரசு
  X
  மத்திய அரசு

  லடாக் எல்லை பாதுகாப்பு பணிக்கு தமிழக போலீசாருக்கு அழைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழக போலீசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக, லடாக் எல்லைப் பகுதியில் பிரச்சினை நிலவிவருகிறது. தற்போதும் அங்கு இருதரப்புகளும் படைகளை குவித்துள்ளன.

  இந்த பரபரப்பான சூழ்நிலையில் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மாநிலங்களில் இருந்து போலீஸ் படைகளுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மொத்தம் சென்னை, ஆவடி உள்பட 15 இடங்களில் போலீஸ் பட்டாலியன் பிரிவு உள்ளது.

  இந்த படை பிரிவுகளில் உள்ளவர்கள் லடாக் எல்லையில் ஒரு மாதம் பணியாற்ற விரும்பினால் பணியாற்றலாம் என்றும், இவ்வாறு பணிபுரிய விருப்பம் தெரிவிப்பவர்கள் தங்களுடைய விவரங்களை தெரிவிக்கலாம் என்றும் அவசர சுற்றறிக்கை தமிழக போலீஸ் தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது.

  அதன்படி, திருச்சி ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் ஒரு மாத காலம் பணியாற்ற ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 போலீசார்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தங்களுடைய குழுமங்களில் பணியுரியும் போலீசார்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களிடம் இருந்து ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் பணிபுரிய விருப்பம் கோரப்பட்டு, அவ்வாறு விருப்பம் தெரிவிப்பவர்களின் விவரத்தினை உடனடியாக அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணிக்கு பணி நியமனம் செய்து அனுப்பப்படுவார்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×