என் மலர்

  செய்திகள்

  கங்கனா ரனாவத்
  X
  கங்கனா ரனாவத்

  கங்கனா ரனாவத்தை போட்டோ, வீடியோ எடுத்த விவகாரம்: விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் நடிகை சண்டிகரில் இருந்து மும்பைக்கு வந்தபோது விமானத்தில் போட்டோ, வீடியோ எடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் மும்பை போலீஸை விமர்சனம் செய்திருந்தார். அதன்பின் கங்கனா ரானாவத்திற்கும், மகாராஷ்டிர மாநில மந்திரி, சிவ சேனா மூத்த தலைவர் ராவத் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

  ஒரு கட்டத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடன் மும்பையை ஒப்பிட்டு கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மகாராஷ்டிர மாநில மந்திரி ஒருவர் கங்கனா ரனாவத் மும்பையில் வசிக்க உரிமை இல்லை என்று கூறினார்.

  இதனிடையே மத்திய அரசு கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது, இதனைத்தொடர்ந்து கடந்த 9-ந்தேதி சண்டிகரில் இருந்து மும்பைக்கு வந்தார். அப்போது விமானத்தில் வரும்போது கங்கனா ரனாவத்தை போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமான போக்குவரத்துறை இயக்குனரகம் இண்டிகோ ஏர்லைன் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  Next Story
  ×