என் மலர்

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    தமிழகத்திற்கு 6-வது தவணையாக ரூ.335.41 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொரோனா நெருக்கடியை சமாளிக்க நிதிக்குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு 6வது தவணையாக 335.41 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு உதவும் வகையில், பாதிப்புகளுக்கு ஏற்ப 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அவ்வகையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 6-வது தவணையாக ரூ.6,195.08 கோடியை, நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதியானது கொரோனா நெருக்கடியின் போது மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இருப்பினும் தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×