என் மலர்

  செய்திகள்

  நிலநடுக்கம்
  X
  நிலநடுக்கம்

  மும்பை அருகே மீண்டும் நிலநடுக்கம் -ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை அருகே கடந்த 7ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
  மும்பை:

  மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே இன்று காலை 3.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பைக்கு வடக்கில் 98 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகாக பதிவாகியிருந்ததாகவும் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

  நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் காயமோ உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

  இதேபோல் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 5ம் தேதி 4 முறை லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 7ம்தேதி மும்பை அருகே 3.5 ரிக்டரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×