search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
    X
    மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

    பிரணாப் முகர்ஜிக்கு ராசியாக அமைந்த 13-ம் எண்

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 13-ம் எண் ராசியானதாக அமைந்துள்ளது.
    புதுடெல்லி:

    பொதுவாக, 13-ம் எண், கெட்ட எண்ணாக கருதப்படுகிறது.

    ஆனால், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 13-ம் எண் ராசியானதாக அமைந்துள்ளது. எண் கணிதத்துக்கே சவால் விடும் இந்த தகவலை பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்தார்.

    பிரணாப் முகர்ஜி, முதன் முதலில் 1969-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி, மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார். டெல்லியில் தல்கடோரா சாலையில் 13-ம் எண் முகவரி கொண்ட வீட்டில்தான் அவர் 10 ஆண்டுகள் குடியிருந்தார். அப்போதுதான், அவரது அரசியல் வாழ்க்கை உச்சத்தை தொட்டது.

    பிரணாப் முகர்ஜியின் திருமண தேதி ஜூலை 13 ஆகும். அவர் நாட்டின் 13-வது ஜனாதிபதி ஆவார்.
    Next Story
    ×