என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  டெல்லியில் நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை - பராமரிப்பு பணிகள் தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை முதல் டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ள நிலையில் மெட்ரோ ரயிலில் இன்று சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி முழுவீச்சில் தீவிரமாக நடைபெறுகிறது.
  புதுடெல்லி:

  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவது கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது, பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிகப்பட்டு வருகின்றன. 

  அதன்படி, வரும் செப்டம்பர் மாதம்  7-ந் தேதி முதல் படிப்படியாக மெட்ரோ ரெயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி,  மெட்ரோ ரெயில் சேவைகளை துவங்க டெல்லி அரசு தயாராகி வருகிறது.  மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. 

  இதன்படி,” பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். ஸ்மார்ட் கார்டு மூலமே பயணம் செய்ய அனுமதி உண்டு. மெட்ரோ ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிற்காது. குறிப்பிட்ட சில ரெயில்களில் மட்டுமே நிற்கும். சமூக இடைவெளி, உடல் வெப்ப நிலை பரிசோதனை போன்ற அனைத்து பாதுகாப்பு விதிகளும் கடுமையாக பின்பற்றப்படும் என்று டெல்லி போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில்  டெல்லியில் 169 நாட்களுக்குப் பிறகு நாளை முதல்  மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ள நிலையில் இன்று மெட்ரோ ரெயிலில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ரெயில் பெட்டிகளை தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். இதுதவிர ரெயிலின் இருக்கைகள், உள்ளிட்ட கருவிகள் போன்றவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  அதனைத்தொடர்ந்து ரெயிலின் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

  Next Story
  ×