search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 9-வது இடம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டிய நிலையில், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தொற்று எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 7964 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 173763 ஆனது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் உலகின் மிக மோசமான நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் நீடிக்கிறது.

    இந்தியாவில் இதுவரை 4971 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் எண்ணிக்கையில் சீனாவை (4,634) இந்தியா பின்னுக்கு தள்ளி உள்ளது.

    உலகம் முழுவதும் 60.33 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.66 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 26.61 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் வருமாறு:-

    அமெரிக்கா - 1,793,530
    பிரேசில்- 468,338
    ரஷியா- 387,623
    ஸ்பெயின்- 285,644
    பிரிட்டன்- 271,222
    இத்தாலி- 232,248
    பிரான்ஸ்- 186,835
    ஜெர்மனி-183,019
    இந்தியா-173,763
    துருக்கி- 162,120.
    Next Story
    ×