என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் மக்கள் வெளியில் நடமாட தடை
    X
    பெங்களூருவில் மக்கள் வெளியில் நடமாட தடை

    வருகிற 14-ந் தேதிக்கு பிறகு பெங்களூருவில் மக்கள் வெளியில் நடமாட தடை?

    வருகிற 14-ந் தேதிக்கு பிறகு மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது என்றே சொல்லலாம். கர்நாடகத்தை பொறுத்தவரையில் தலைநகர் பெங்களூருவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 60-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பெங்களூருவில் கொரோனா வைரசை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசு சில தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகிறது. காரணம், வருகிற 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கப்போகிறது. அதாவது வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி 14-ந் தேதிக்கு பிறகு பெங்களூருவில் மக்களின் நடமாட்டத்தை முழுமையாக தடை செய்ய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. அதன்படி கடைகள், காய்கறி கடைகள், மருந்து கடைகள் என அனைத்தும் மூடப்பட உள்ளது. அதற்கு பதிலாக மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதை உறுதி செய்யும் வகையில் நகரின் மையப்பகுதிக்கு வரும் சாலைகளும், இணைப்பு சாலைகளும் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டு உள்ளன. அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர், உதவி மையத்தை தொடர்பு கொண்டால், போலீசாரே காரை அனுப்பி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். இந்த தடையையும் மீறி வெளியில் நடமாடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×