என் மலர்

  செய்திகள்

  கவுதம் காம்பீர்
  X
  கவுதம் காம்பீர்

  கொரோனா நிவாரணம்- டெல்லி அரசுக்கு மேலும் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கும் காம்பீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா நிவாரணப் பணிகளுக்காக டெல்லி அரசுக்கு மேலும் 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக பாஜக எம்பி காம்பீர் அறிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பொதுமக்கள் நிதி வழங்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக PM Cares Fund என்ற பெயரில் தனி நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில அரசுகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

  இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

  அவ்வகையில்  கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக, பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து டெல்லி அரசுக்கு ரூ. 50 லட்சம் வழங்குவதாக 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். தற்போது கூடுதலாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருப்பதாக கூறி உள்ளார். இது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
  Next Story
  ×