என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
By
மாலை மலர்15 Jan 2020 9:54 PM GMT (Updated: 15 Jan 2020 9:54 PM GMT)

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
புதுடெல்லி:
நாடு முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நடந்த போராட்டங்களை பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தீவிரயமாக நடத்தி வந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது கடந்த டிசம்பர் 20-ம் தேதி போலீசாரின் முன் அனுமதி இல்லாமல் டெல்லி ஜாமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாகச் செல்ல, பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, மக்களை வன்முறைக்குத் தூண்டிய குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் டெல்லி கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் இதுகுறித்து பேசிய நீதிபதி பிப்ரவரி 16 வரை பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் எங்கும் போராட்டம் செய்ய கூடாது என்றும் அதேபோல் பிப்ரவரி 16 வரை அவர் டெல்லிக்கு வர கூடாது என்று கூறினார். அவர் 25 ஆயிரம் ரூபாய் பிணை தொகை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். மேலும் இது தவிர சில நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 15 பேருக்கு ஏற்கெனவே கடந்த 9-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story
×