என் மலர்

    செய்திகள்

    நோயாளியின் உடலில் இருந்து நீக்கப்பட்ட சிறுநீரகம்
    X
    நோயாளியின் உடலில் இருந்து நீக்கப்பட்ட சிறுநீரகம்

    உலகில் அதிக எடைகொண்ட சிறுநீரகத்தை நீக்கி டெல்லி மருத்துவர்கள் சாதனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெல்லியில் ஒரு நோயாளியின் உடலில் இருந்து 7. 4 கிலோ அளவிலான மிகப்பெரிய சிறுநீரகத்தை நீக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று கிட்னி. இதன் சராசரி எடை அளவு என்பது 120 முதல் 150 வரை கிராம் மட்டுமே ஆகும். 

    இதற்கிடையில், மனித உடலில் இருந்து 4.25 கிலோ எடைகொண்ட கிட்னி அகற்றப்பட்டதே கின்னஸ் உலக சாதனையையாக கருதப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆபரேஷன் மூலம் ஒரு நோயாளியின் உடலில் இருந்து 7.4 கிலோ அளவிலான கிட்னியை நீக்கியுள்ளனர். 

    நோயாளியின் உடலில் இருந்து நீக்கப்பட்ட சிறுநீரகம்

    இதன் மூலம் மனித உடலில் இருந்து நீக்கப்பட்ட அதிக எடையிலான கிட்னி என்ற கின்னஸ் சாதனை பதிவுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

    ஆபரேஷனுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஸ்கேனில் நோயாளியின் உடலில் இவ்வளவு எடைகொண்ட கிட்னி இருப்பது எங்களுக்கு முதலில் தெரியவில்லை. 

    ஆனால் ஆபரேஷன் செய்யும் போதுதான் நோயாளியின் கிட்னி மிகப்பெரிய அளவில் இருப்பதை கண்டுபிடித்தோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

    Next Story
    ×