என் மலர்

    செய்திகள்

    மாணவி ‌ஷகாலா
    X
    மாணவி ‌ஷகாலா

    கேரளாவில் பாம்பு கடித்து மாணவி பலியான பள்ளி கட்டிடத்தை இடிக்க முடிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரளாவில் பாம்பு கடித்து மாணவி பலியான பள்ளி கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு, ரூ.2 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டப்படும் என்று பத்தேரி நகர சபை தலைவர் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரியை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ். அப்துல் அஜிஸின் மகள் ‌ஷகாலாஷெரின்(வயது10). இவர் பத்தேரியில் உள்ள சர்வஜன அரசு மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார். கடந்த 20-ந்தேதி மாலை மாணவி ‌ஷகாலாஷெரின் பள்ளி வகுப்பறையில் இருந்தபோது அங்கிருந்த துவாரம் வழியாக வந்த பாம்பு மாணவி ‌ஷகாலாஷெரினை கடித்தது.

    அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காததால் மாணவி ‌ஷகாலாஷெரின் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    ‌ஷகாலாஷெரின் பலியானது அறிந்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மாணவர் சங்கங்களும் போராட்டத்தில் குதித்தனர். பாம்பு கடித்த மாணவி ‌ஷகாலாஷெரினுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யாத பள்ளி ஆசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    சமூக ஊடகங்களிலும் இந்த பிரச்சினை வெளியாகி விஸ்வரூபம் எடுத்தது.

    இது குறித்து, பத்தேரி தாலுகா அரசு டாக்டர் ஜிஷாமெரின்ஜாய் கூறும்போது, சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் போதுமான மருந்து இல்லை. எனவே தான் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றார். இதையடுத்து மாணவி ‌ஷகாலாஷெரின் படித்த பள்ளியின் முதல்வர் கருணாகரன், துணை முதல்வர் மோகனன் மற்றும் பத்தேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஜிஷாமெரின்ஜாய் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் பத்தேரி சர்வஜன அரசு பள்ளியை மாவட்ட நீதிபதி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் மாணவி ‌ஷகாலாஷெரினின் வகுப்பறை இருந்த கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை கண்டனர்.

    வகுப்பறையில் பாம்பு வந்த துவாரம்

    கட்டிடத்தின் சுவர்களில் பல இடங்களில் ஓட்டைகளும், துவாரங்களும் இருப்பதை கண்டு பிடித்த அதிகாரிகள் அந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று அறிக்கை அளித்தனர். இது பற்றி பத்தேரி நகர சபை தலைவர் ஷாபு கூறியதாவது:-

    மாணவி ‌ஷகாலாஷெரின் படித்த பள்ளி வகுப்பறை கட்டிடம் 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கட்டிடம். எனவே அந்த கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட நகர சபை முடிவு செய்துள்ளது. அங்கு அரசின் நிதி ரூ.2 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டப்படும். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள கல்வித்துறை துணை இயக்குனர் இப்ராகிம் தோனிக்கரா கூறியதாவது:-

    மாணவி ‌ஷகாலாஷெரின் இறந்ததும் அவரது பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். அவர்கள் மீது பள்ளி அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

    பள்ளிக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அவர்கள் மீது விரோதம் பாராட்டக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×