search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி காலை தொட்ட வணங்கி போலீஸ் அதிகாரி
    X
    மம்தா பானர்ஜி காலை தொட்ட வணங்கி போலீஸ் அதிகாரி

    மம்தா காலை தொட்டு வணங்கிய போலீஸ் ஐ.ஜி. - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மம்தா பான்ர்ஜியின் காலை தொட்டு வணங்கி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    கொல்கத்தா:

    மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த வாரம் டிகா பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு தலைமை அதிகாரியாக வினித்குமார் கோயல் இருந்து வருகிறார். இவர் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.

    சுற்றுப்பயணம் செய்த அன்று அவருடைய பிறந்த நாள் ஆகும். எனவே மம்தா பானர்ஜி முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது மம்தா பானர்ஜி அங்கிருந்த தலைவர்களுக்கு கேக் ஊட்டி விட்டார்.

    அந்த நேரத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜீவ் மிஸ்ரா அருகில் இருந்தார். அவருக்கும் மம்தா பானர்ஜி கேக் ஊட்டினார். உடனே ராஜீவ்மிஸ்ரா, மம்தா பானர்ஜியின் காலை தொட்டு வணங்கினார்.

    அவர் அந்த நேரத்தில் போலீஸ் சீருடையில் இருந்தார். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மம்தாவின் காலை தொட்டு வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் காலை தொட்டு வணங்கும் வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளனர்.

    இதுசம்பந்தமாக மம்தாவோ அல்லது அந்த போலீஸ் அதிகாரியோ இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.

    Next Story
    ×