என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்கில் போரில் பங்கேற்று 'வீர் சக்ரா' விருது பெற்ற வீரரின் தற்போதைய நிலை?
Byமாலை மலர்26 July 2019 2:25 PM IST (Updated: 26 July 2019 6:04 PM IST)
கார்கில் போர் வெற்றி தினமான இன்று, அப்போரில் பங்குப்பெற்று 'வீர் சக்ரா' எனும் உயரிய விருது பெற்ற வீரர் ஒருவரின் தற்போதைய நிலை என்ன? என்பதை பார்ப்போம்.
சண்டிகர்:
காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 200 கி.மீ. வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடிக்க திட்டமிட்டது.
இதற்காக ஆபரேஷன் விஜய் எனும் திட்டத்தை கொண்டு வந்தது. 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி 2 முக்கிய பகுதிகளை மீட்க கார்கிலில் மும்முனை தாக்குதல் நடத்தியது. 11 மணி நேர கடுமையான தாக்குதலுக்கு பின்னர் டைகர் ஹில்ஸ் எனும் பகுதியை மீட்டது.
அவருடன் இணைந்து 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த செயலை செய்தவர்தான் சத்பால் சிங். இந்த செயலுக்காக சத்பாலுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இத்தகைய வீரர் தற்போது பஞ்சாப்பில் உள்ள பாவனிகர் என்ற பகுதியில் டிராபிக் கான்ஸ்டெபிளாக இருக்கிறார்.

இந்த குழுவில் 2 அதிகாரிகள் தலைமை கொண்ட 8 சிக்கிம் படைகள் களமிறங்கினர். இதில் 46 வீரர்களும், 19 குண்டு எறியும் வீரர்களும் இருந்தனர். இந்த போராட்டத்தில் பாகிஸ்தானின் உயரிய வீரர் என விருது பெற்ற கேப்டன் கர்னல் ஷேகர் கொல்லப்பட்டார்.
அவருடன் இணைந்து 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த செயலை செய்தவர்தான் சத்பால் சிங். இந்த செயலுக்காக சத்பாலுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இத்தகைய வீரர் தற்போது பஞ்சாப்பில் உள்ள பாவனிகர் என்ற பகுதியில் டிராபிக் கான்ஸ்டெபிளாக இருக்கிறார்.
தற்போதைய வாழ்க்கை நிலை குறித்து சத்பால் கூறுகையில், 'நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன் என நினைக்கிறேன். வீர் சக்ரா விருதால் நான் எந்த பலனும் அடையவில்லை. முன்னாள் வீரர் கோட்டாவில் இப்போது இந்த பணியில் இருக்கிறேன்.
கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தும் வேலை இல்லாமல் இருக்கும் என் மகனை நினைத்துதான் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கடவுளுக்கும் இரக்கம் உள்ளதால் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்' என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Next Story
×