என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
துப்பாக்கி முனையில் கொள்ளை
கோழிக்கோடு அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை
By
மாலை மலர்14 July 2019 10:55 PM GMT (Updated: 14 July 2019 10:55 PM GMT)

கோழிக்கோடு அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோழிக்கோடு:
கோழிக்கோடு அருகே உள்ள ஓமேச்சேரியில் பிரபல நகைக்கடையில், நேற்று முன்தினம் இரவு கடை ஊழியர்கள் கதவை மூடிவிட்டு நகையை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென்று முகமூடி அணிந்த 3 வாலிபர்கள் கதவை திறந்து கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் கடை ஊழியர்களை மிரட்டி கடையில் 12 பவுன் வளையல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.
இதில் ஒருவர் கால்இடறி கீழே விழுந்தார். மற்ற 2 பேரும் அங்கிருந்து 12 பவுன் நகையுடன் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட கொள்ளையனை கடை ஊழியர்கள் கடுமையாக தாக்கினர். பின்னர் அவர் கொடுவள்ளி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடை ஊழியர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கொள்ளையனை போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விசாரணையில் அவர், வங்காளதேசத்தை சேர்ந்த ரகீம் (வயது 31) என்பதும், திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்த இவர்கள் கேரளாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து கொடுவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகீமை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story
×