என் மலர்

  செய்திகள்

  மூன்றாவதாக பிறந்தால் வாக்குரிமை ரத்தா? - பாபா ராம்தேவ் கருத்துக்கு ஒவைசி கண்டனம்
  X

  மூன்றாவதாக பிறந்தால் வாக்குரிமை ரத்தா? - பாபா ராம்தேவ் கருத்துக்கு ஒவைசி கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியர்களுக்கு இனி மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் அரசின் சலுகைகள் ரத்து செய்ய வேண்டும் என்ற பாபா ராம்தேவ் கருத்தை ஒவைசி கண்டித்துள்ளார்.
  ஐதராபாத்:

  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரபல யோகாசன குருவும் ‘பதாஞ்சலி’ நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ், இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

  ‘அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு நமது நாட்டின் மக்கள்தொகை 150 கோடியை தாண்டிப்போக நாம் அனுமதிக்க கூடாது. 150 கோடியை கடந்த ஒரு மக்கள்தொகையை தாங்கும் சக்தி நம்மிடம் இல்லை.

  இனி மூன்றாவதாக அல்லது அதற்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் அரசின் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று சட்டம் இயற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும்’ என்று பாபா ராம்தேவ் வலியுறுத்தி இருந்தார்.

  பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கு ஐதராபாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாட்-உல்-முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.  ‘அரசியலமைப்புக்கு முரணாக கருத்து தெரிவிப்பவர்களை தடுக்கும் சட்டம் ஏதுமில்லாத நிலையில் பாபா ராம்தேவின் பேச்சு அவசியமில்லாத முக்கியத்துவத்தை எப்படி பெறுகிறது?

  அவர் (பாபா ராம்தேவ்) தனது வயிற்றை வைத்து வித்தை காட்டுவார், அமர்ந்தவாறே கால்களை சுழற்றுவார் என்பதற்காக மூன்றாவது பிள்ளையாக பிறந்த காரணத்துக்காக நரேந்திர மோடி தனது வாக்குரிமையை இழக்க வேண்டுமா?’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
  Next Story
  ×