என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் 59 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்தது
Byமாலை மலர்17 May 2019 6:16 PM IST (Updated: 17 May 2019 10:00 PM IST)
பாராளுமன்ற தேர்தலில் 19-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் 59 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
புதுடெல்லி:
ஏப்ரல் மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.
ஏப்ரல் 11-ந் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளுக்கு 4-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.
வரும் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிக்கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதையொட்டி 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த 59 தொகுதிகளில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கொல்கத்தா நகரில் அமித் ஷா பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் ஒருநாள் முன்னதாகவே (நேற்று முதல்) பிரசாரத்துக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மீதமுள்ள 59 தொகுதிகளில் நடைபெற்றுவந்த உச்சக்கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுவடைந்தது.
19-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். முன்னர் ஆறுகட்டங்களாக நடந்த தேர்தலுடன் அனைத்து தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் படிப்படியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X