என் மலர்

  செய்திகள்

  வாரணாசியில் 15-ந்தேதி பிரியங்கா நடத்தும் பிரமாண்ட ரோடு ஷோ
  X

  வாரணாசியில் 15-ந்தேதி பிரியங்கா நடத்தும் பிரமாண்ட ரோடு ஷோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நடத்தும் ரோடு-ஷோவிற்கு சுமார் 2 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

  அந்த தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.

  கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தடவை அதை விட 2 மடங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வாரணாசி தொகுதியில் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  மோடி கடந்த மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது சுமார் 3 லட்சம் பேர் ரோடு ஷோவில் கலந்து கொண்டனர். மீண்டும் ஒரு தடவை அவர் வாரணாசி தொகுதிக்கு வந்து தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

  17-ந்தேதி வாரணாசி தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது. எனவே 17-ந்தேதி பிற்பகல் அவர் வாரணாசி தொகுதியில் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தடவை அவரை 2-வது இடத்துக்கு கொண்டு வர பிரியங்கா விரும்புகிறார். இதற்காக அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரியங்கா முடிவு செய்துள்ளார்.

  நாளை மறுநாள் (புதன்கிழமை) பிரியங்கா வாரணாசி தொகுதிக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் பிரமாண்டமான ரோடு-ஷோ நடத்துகிறார். இந்த ரோடு-ஷோவில் சுமார் 2 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

  இதற்கிடையே மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இணைந்து வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடத்தி பிரசாரம் செய்ய உள்ளனர். மறுநாள் மோடி பிரசாரம் செய்கிறார்.  16-ந்தேதி மேற்கு வங்க மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்கிறார். அன்றிரவு அவர் வாரணாசி வந்து தங்கி இருந்து மறுநாள் பிரசாரம் செய்ய உள்ளார்.
  Next Story
  ×