என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ
    X

    ஒடிசாவில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ

    டெல்லியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    புவனேஷ்வர்:

    தலைநகர் டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் இன்று மதியம் 1 மணியளவில் ஒடிசாவின் பாலாசோர் மற்றும் சோரா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள காந்தபடா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென ரெயிலின் ஒரு பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது. இதை கவனித்த டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். 

    உடனடியாக அந்த பெட்டியின் இணைப்பு அகற்றப்பட்டதால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×