search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப்ளேஸ்டோருக்கு மீண்டும் வந்த டிக் டாக்- பயனாளர்கள் உற்சாகம்
    X

    ப்ளேஸ்டோருக்கு மீண்டும் வந்த டிக் டாக்- பயனாளர்கள் உற்சாகம்

    டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நிபந்தனையுடன் மதுரை ஐகோர்ட் நீக்கியது. இதையடுத்து கூகுள் நிறுவனம் டிக் டாக் செயலியை மீண்டும் ப்ளேஸ்டோருக்கு கொண்டு வந்துள்ளது. #TikTok #Google
    புது டெல்லி:

    டிக்-டாக் செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில் கடந்த ஏப்ரல் 24 அன்று இறுதியாக தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘சமூக  சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்கள் சிறுவர், சிறுமியர் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது.

    டிக் டாக் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ என்ற நிபந்தனையுடன் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.



    இதனையடுத்து கூகுள் நிறுவனம், ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிய டிக் டாக் செயலியை மீண்டும் தரவிறக்கம் செய்யும் வகையில் கொண்டு வந்துள்ளது. இதனால் டிக் டாக் பயனாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அவர்களது உற்சாகத்தை பிரதிபலிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வேகமாக பரவி வருகிறது. #TikTok #Google



      
    Next Story
    ×