என் மலர்
செய்திகள்

மோடிக்கு வாக்களியுங்கள் - மகள் திருமண அழைப்பிதழ் மூலம் பீகார்வாசி பிரசாரம்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தனது மகள் திருமண அழைப்பிதழில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வாக்களியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். #Weddingcard #voteforModi #LSpolls
பாட்னா:
பீகார் மாநிலம், சிவான் மாவட்டம், சிவான் கலா கிராமத்தை சேர்ந்தவர் அசோக் சிங். 15 ஆண்டுகளாக குவைத்தில் வேலை செய்துவரும் இவர் தனது மகளின் திருமணத்துக்காக இந்தியா வந்துள்ளார்.
வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ள மகள் திருமண அழைப்பிதழ் மேலுறையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வாக்களியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற அரசியல்வாதிகள் தங்களைப்பற்றி மட்டும் நினைக்கும்போது இவர் மட்டுமே நாட்டைப்பற்றி நினைக்கிறார். அதனால், மோடியைவிட சிறந்த தலைவர் யாருமில்லை என்பதால் அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என நான் விரும்புகிறேன் என அசோக் சிங் தெரிவித்தார். #Weddingcard #voteforModi #LSpolls
Next Story






