என் மலர்
செய்திகள்

இந்திய விமானி அபினந்தனை வரவேற்க பெற்றோர் டெல்லி புறப்பட்டனர்
பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபினந்தனை வரவேற்க அவரது பெற்றோர் இன்று இரவு டெல்லி புறப்பட்டனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan
சென்னை:
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார். அமைதிக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் விடுதலை செய்யப்பட்டு உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என தெரிவித்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறைபிடிக்கப்பட்டுள்ள அபிநந்தன், லாகூரில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார் என்றும், டெல்லி அல்லது மும்பை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபினந்தனை வரவேற்க அவரது தந்தை வர்தமான், தாயார் ஷோபனா ஆகியோர் இன்று இரவு டெல்லி புறப்பட்டனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan
Next Story






