என் மலர்
செய்திகள்

மத்திய அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட மீன்வளத்துறை செயலாளராக தருண் ஸ்ரீதர் நியமனம்
மத்திய மீன்வளத்துறையின் முதல் செயலாளராக தருண் ஸ்ரீதர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடைத்துறை, பால்வளத்துறையுடன் கூடுதலாக இந்த பொறுப்பை இவர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #TarunSridhar #FisheriesSecretary
புதுடெல்லி:
மீனவ மக்களின் நலனை பாதுகாப்பதற்காக மத்திய மீன்வளத்துறை என்னும் புதிய துறையை மத்திய அரசு சமீபத்தில் உருவாக்கியது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இந்த
மத்திய மீன்வளத்துறை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த மீன்வளத்துறைக்கு என்று செயலாளராக யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மத்திய கால்நடைத்துறை, பால்வளத்துறை செயலாளராக பதவி வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தருண் ஸ்ரீதர் கூடுதலாக இந்த பொறுப்பை கவனிப்பார் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த துறைக்கு நிரந்தர செயலாளர் நியமிக்கும் வரை இப்பொறுப்பை தருண் ஸ்ரீதர் கவனிப்பார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என இன்றிரவு மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TarunSridhar #FisheriesSecretary
Next Story






