என் மலர்
செய்திகள்

உ.பி. கும்பமேளாவில் பாஜக தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் புனித நீராடினர்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.

கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். அத்துடன், கங்கை நதிக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டனர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
Next Story






