என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மும்பை நட்சத்திர ஓட்டலில் கனடா நாட்டு பெண் மானபங்கம்
By
மாலை மலர்18 Jan 2019 1:26 AM GMT (Updated: 18 Jan 2019 1:26 AM GMT)

மும்பை நட்சத்திர ஓட்டலில் கனடா நாட்டை சேர்ந்த 29 வயது பெண்ணை மானபங்கம் செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #CanadianWomen #Molested #Mumbai #5StarHotel
மும்பை:
கனடா நாட்டை சேர்ந்த 29 வயது பெண் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக அவர் அடிக்கடி மும்பை வருவது வழக்கம். அவர் ஜூகுவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்குவார். இதன்படி கடந்த 3-ந் தேதி மும்பை வந்திருந்த அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று அந்த பெண் தனது அறையில் இருந்தபோது, ஓட்டல் ஊழியர் சுமித் ராவ் என்பவர் நேற்று ஒரு பரிசு பொருளை கொடுத்தார். ஏற்கனவே சுமித் ராவ் தனக்கு அறிமுகமானவர் என்பதால் அவர் கொடுத்த பரிசு பொருளை வாங்கிக் கொண்டார். இந்த நிலையில், சுமித் ராவ் அந்த பெண்ணுடன் செல்பி எடுத்து உள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் அந்த பெண்ணை மானபங்கம் செய்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை கடுமையாக திட்டி அனுப்பினார். மேலும் இதுபற்றி சாந்தாகுருஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர் சுமித் ராவை கைது செய்தனர். #CanadianWomen #Molested #Mumbai #5StarHotel

Next Story
×