என் மலர்

  செய்திகள்

  ஒரே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் இரட்டையர்கள்.
  X
  ஒரே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் இரட்டையர்கள்.

  கேரளாவில் ஒரே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் இரட்டையர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கரிப்பூரா போலீஸ் நிலையத்தில் இரட்டையர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அங்குள்ள உயர் அதிகாரிகள் இவர்களில் யாரிடம் வேலை கொடுத்தோம் என்பது தெரியாமல் திகைத்து வருகிறார்கள்.
  கொழிஞ்சாம்பாறை:

  கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மீராடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி ஜெயலதா.

  இவர்களுக்கு சிசிது (30), சித்தோ (30) ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சிறுவர் முதல் ஒரே நிறத்தில் பேண்ட்-சட்டை அணிவது, ஒன்றாக படிப்பது என இணை பிரியாமல் இருந்தனர். சாப்பாடு வி‌ஷயத்திலும் ஒன்றாக இருந்தனர். தாங்கள் இருவரும் போலீஸ்காரராக வேண்டும் என நினைத்தனர். இதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி போலீஸ் தேர்விலும் கலந்து கொண்டனர். நினைத்த படி அவர்களது ஆசை நிறைவேறியது. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு சிதோவுக்கு போலீஸ் வேலை கிடைத்தது. 2012-ல் சிசிது போலீஸ் வேலைக்கு தேர்வானார்.

  அவர்கள் இருவரும் தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கரிப்பூரா போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அங்குள்ள உயர் அதிகாரிகள் இவர்களில் யாரிடம் வேலை கொடுத்தோம் என்பது தெரியாமல் திகைத்து வருகிறார்கள்.
  Next Story
  ×