என் மலர்
செய்திகள்

மனநலம் பாதித்தவர்களை சங்கிலியால் கட்டுவது மனிதத்தன்மையற்றது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
மனநலம் பாதித்தவர்களை சங்கிலியால் கட்டுவது கொடூரமானது, மனிதத்தன்மையற்றது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #SupremeCourt #Inhuman #Atrocious
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் கவுரவ்குமார் பன்சால் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், உத்தரபிரதேச மாநிலம் புடோன் மாவட்டத்தில் உள்ள மனநல காப்பகத்தில் மனநலம் பாதித்தவர்களை சங்கிலியால் கட்டிவைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல்நசீர் ஆகியோர் விசாரித்தனர். நீதிபதிகளிடம் இதுதொடர்பான புகைப்படங்களையும் வக்கீல் காண்பித்தார்.

அதனை பார்த்த நீதிபதிகள், இது கொடூரமானது, மனிதத்தன்மையற்றது. ஒருவேளை இவர்கள் மூர்க்கத்தனமாக இருந்தாலும் சங்கிலியால் கட்டிப்போடுவதை ஏற்கமுடியாது. மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தில் வரம்புமீறி செயல்பட வேண்டாம் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #SupremeCourt #Inhuman #Atrocious

Next Story