என் மலர்
செய்திகள்

மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்
மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார். #CIC #SudhirBhargava
புதுடெல்லி:
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொதுமக்கள் விபரங்களை பெற மனு செய்யும் மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் உள்பட 11 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த விவகாரத்தை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சிலர் தொடர்ந்த வழக்கில் உடனடியாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கையாளப்பட வேண்டும் என சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர் பணி ஓய்வு பெற்ற பின்னர் அந்த பதவிக்கான புதிய நியமனம் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், புதிய தலைமை ஆணையராக சுதிர் பார்கவா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஆன்லைன் மூலம் இந்த பதவிக்காக விண்ணப்பித்திருந்த 65 பேரில் தகுதி அடிப்படையில் சுதிர் பார்கவா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #CIC #SudhirBhargava

இதைதொடர்ந்து, புதிதாக மேலும் 4 தகவல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்தது. யாஷ்வர்தன் குமார் சின்கா, வனஜா என்.சர்னா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா ஆகிய 4 தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

Next Story