search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    குஜராத்தில் வங்காளதேச தீவிரவாதி கைது
    X

    குஜராத்தில் வங்காளதேச தீவிரவாதி கைது

    உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் வங்காளதேச தீவிரவாதியை ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். #Bangladeshi
    ஆமதாபாத்:

    வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில், அன்சாருல்லா பங்ளா குழுவும் ஒன்று. இந்த இயக்கத்துடன் தொடர்புடைய அசோம் சம்சு ஷேக் என்கிற பக்கிர் (வயது 52), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு தப்பி ஓடினார். இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது தீவிரவாதி பக்கிர், குஜராத் மாநிலம் பரூச்சில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது நடமாட்டம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் நேற்று ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது, பக்கிர் கடந்த 15 ஆண்டுகளாக குஜராத்தில் தலைமறைவாக வசித்து வந்ததும், இந்திய முகவரியில் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரிய வந்தது. பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×