search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாஜ்பாய் பிறந்தநாள் - 24ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு கொண்டாட்டங்கள்
    X

    வாஜ்பாய் பிறந்தநாள் - 24ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு கொண்டாட்டங்கள்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, டிசம்பர் 24 அன்று பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #Parliament #AtalSammanSammelan #Vajpayee
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சியின் பிரதமராக ஐந்தாண்டுகள் நீடித்த முதல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். 25-12-1924 அன்று பிறந்த இவர் 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராடி பொது வாழ்வில் நுழைந்தார்.

    லக்னோ தொகுதி எம்.பி.யாக 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆண்டுகளில் தொடர்ந்து ஐந்துமுறை இவர் வெற்றி பெற்றுள்ளார். பிரதமராவதற்கு முன்னர் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவிவகித்த வாஜ்பாய், உடல்நலக் குறைவால் அரசியலில் இருந்து விலகினார். இவர் கடந்த ஆகஸ்டு 16ம் தேதி மறைந்தார்.



    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் வரும் 24ம் தேதி வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு வாஜ்பாய் நினைவு விருதளிக்க உள்ளோம்.

    வாஜ்பாய் பற்றிய செய்திப்படம் திரையிடப்படும். இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் மாணவர்கள் பலர் வாஜ்பாய் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். #Parliament #AtalSammanSammelan #Vajpayee
    Next Story
    ×