என் மலர்

  செய்திகள்

  மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதல்: 7 பெண்கள் உள்பட 10 பேர் பலி
  X

  மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதல்: 7 பெண்கள் உள்பட 10 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபூர் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில் 7 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். #Accident
  நாக்பூர்:

  மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபூர் மாவட்டத்தில் 14 பயணிகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று கோர்பனாவில் இருந்து வானி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேன் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

  இந்த விபத்தில் 7 பெண்கள், வேன் டிரைவர், 3 வயது குழந்தை மற்றும் மற்றொரு நபர் என 10 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். ஒரு வயது குழந்தை காயம் எதுவுமின்றி தப்பியது.

  சம்பவத்திற்கு பின்னர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Next Story
  ×