என் மலர்

  செய்திகள்

  அமித்ஷா யாத்திரைக்கு அனுமதி மறுப்பு - கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி
  X

  அமித்ஷா யாத்திரைக்கு அனுமதி மறுப்பு - கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக தலைவர் அமித்ஷா நடத்தவுள்ள யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட் அனுமதி மறுத்துள்ளது. #CoochBeharRathyatra #BJP #KolkattaHighCourt
  கொல்கத்தா:

  அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் 3 நாட்கள் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்குகிறார்.

  இந்த யாத்திரை கூச்பெகரில் நாளை தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்து வந்தது.

  இந்நிலையில், யாத்திரை நடத்த அனுமதி கோரி மாநில பாஜக சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத ரீதியிலான மோதல்கள் ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

  கொல்கத்தா ஐகோர்ட் யாத்திரைக்கு தடை விதித்துள்ளது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #CoochBeharRathyatra #BJP #KolkattaHighCourt
  Next Story
  ×