search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கரி சுரங்க ஊழல் - 6 குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
    X

    நிலக்கரி சுரங்க ஊழல் - 6 குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

    நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகளின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது. #CoalScam #Punishment #HCGupta
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையில் மேற்படி 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் 6 பேருக்கும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது. எனினும் 70 வயது குப்தாவுக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. #CoalScam #Punishment #HCGupta 
    Next Story
    ×