search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் தேர்தல் முடிந்ததும் பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும் - ஹர்திக் படேல்
    X

    ராஜஸ்தான் தேர்தல் முடிந்ததும் பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும் - ஹர்திக் படேல்

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும் என படேல் இன தலைவரான ஹர்திக் படேல் கூறியுள்ளார். #HardikPatel #RajasthanElection #BJP
    உதய்பூர்:

    படேல் இன தலைவரான ஹர்திக் படேல் ராஜஸ்தான் மாநிலம் கோடா மற்றும் ஜகல்வார் மாவட்டங்களில் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில் ‘கிராமங்களில் நான் மக்களை சந்தித்த போது மக்கள் அனைவரும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பதை உணர முடிந்தது. இதனால் 7-ந் தேதி நடைபெறும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும். இப்போது உள்ள நிலையில் அதுதான் பாரதீய ஜனதாவுக்கு சரியான இடம் தான். மக்கள் அந்த கட்சிக்கு எதிராக ஓட்டு போடும் மனநிலையில் உள்ளனர்.



    குறிப்பாக வேலை வாய்ப்பை உருவாக்காத பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்ட இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நான் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன். ஆனால் எனது அமைப்பான கிஷான் கிராந்தி சேனா சார்பில் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை விளக்குவதற்கு மக்களை சந்திப்பேன்’ என்றார். #HardikPatel #RajasthanElection #BJP
    Next Story
    ×