search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமரீந்தர்சிங் பற்றி விமர்சனம்- சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் 2 மந்திரிகள் கண்டனம்
    X

    அமரீந்தர்சிங் பற்றி விமர்சனம்- சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் 2 மந்திரிகள் கண்டனம்

    பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர் சிங்கை மறைமுகமாக விமர்சித்த விவகாரத்தில், சித்துவுக்கு மேலும் 2 மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #NavjotSinghSidhu
    சண்டிகர்:

    பாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து கலந்து கொண்டார். பாகிஸ்தான் அழைப்பை ஏற்று அவர் சென்று வந்தார்.

    ஆனால் பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர்சிங்கோ பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் ஈடுபடுவதால் அவர் பாகிஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

    இதுகுறித்து நிருபர்களின் கேள்விக்கு சித்து பதில் அளிக்கும் போது முதல்-மந்திரி அமரீந்தர்சிங்கை மறைமுகமாக தாக்கி விமர்சனம் செய்தார். அவர் கூறும் போது, ‘‘ராகுல்காந்தி தான் எனக்கு கேப்டன். பாகிஸ்தானுக்கு அவர்தான் என்னை அனுப்பினார். கேப்டனுக்கு (அமரீந்தர்சிங்) கேப்டன் ராகுல்காந்தி தான். அவர் ராணுவ கேப்டன்’’ என்றார்.



    சித்துவின் இந்த விமர்சனம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க்கொடி எழுந்துள்ளது.

    சக மந்திரிகளான சுக்ஜிந்தர் சிங் ரன்ட்வா, ராஜிந்தர் பாஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்காரியா, ரானா குர்மித்சிங் ஆகிய 4 பேர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்தநிலையில் சித்துவுக்கு மேலும் 2 மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, போக்குவரத்துதுறை மந்திரி அருணா சவுத்ரி, வனத்துறை மந்திரி சாதுசிங் தரம்சோத் ஆகியோர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளனர்.

    சித்துவின் கருத்து துரதிருஷ்டவசமானது. அவரது இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. கேப்டன் அமரீந்தர் சிங் எங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அவர் தான் கேப்டன். கடந்த சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி முக்கிய பங்காற்றினார்.

    அதேநேரத்தில் ஒட்டு மொத்த காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். இந்த உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால் கேப்டன் அமரீந்தர் சிங் பற்றி சித்துவின் விமர்சனம் துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மந்திரி சாதுசிங் தரம் சோத் கூறும்போது, ‘‘சித்து தன்னை ஒரு மந்திரி என்பதை மறந்துவிடக்கூடாது. டெலிவிசன் காமெடி ஷோ மாதிரி கிடையாது. மூத்த தலைவர்களை அவர் மதிக்க வேண்டும். சித்து முதல்- மந்திரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். #NavjotSinghSidhu
    Next Story
    ×