என் மலர்
செய்திகள்

இரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு
இரட்டை இலை சின்னம் பெறும் விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. #TwoLeavesSymbol #Bribe #TTVDhinakaran
புதுடெல்லி:
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும்.

லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து நத்துசிங், லலித்குமார், குல்பித் குந்த்ரா உள்பட 5 பேரை விடுவித்தது நீதிமன்றம்.
மேலும், இந்த வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. #TwoLeavesSymbol #Bribe #TTVDhinakaran
Next Story






