என் மலர்

  செய்திகள்

  6 நாட்கள் அரசுமுறை பயணம் முடிந்து நாடு திரும்பினார் வெங்கையா நாயுடு
  X

  6 நாட்கள் அரசுமுறை பயணம் முடிந்து நாடு திரும்பினார் வெங்கையா நாயுடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்ரிக்க நாடுகளுக்கு 6 நாள் அரசு முறை பயணமாக சென்று இருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று டெல்லி வந்தடைந்தார். #VenkaiahNaidu
  புதுடெல்லி:

  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அக்டோபர் 31-ம் தேதி ஆப்ரிக்க நாடுகளுக்கான தனது அரசு முறை பயணத்தை துவக்கினார். பயணத்தின் முதல் நாடாக போட்ஸ்வானாவுக்கு சென்றடைந்தார். அதன் பின்னர் ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளுக்கு சென்றார்.

  6 நாட்கள் தனது அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை 6.45 மணியளவில் டெல்லி வந்தடைந்தார். இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பயணம் மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

  3 நாடுகளுடனான உறவு இந்த பயணத்தின் மூலம் மேம்பட்டதாகவும், அதன்மூலம் முழுமையான திருப்தி அடைந்ததாகவும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். #VenkaiahNaidu
  Next Story
  ×