என் மலர்
செய்திகள்

பீகார் - ஜே.என்.யு மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் வாகனம் மீது திடீர் தாக்குதல்
பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஜே.என்.யு. மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #KanhaiyaKumar
பாட்னா:
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அணி தலைவராக இருந்து வருபவர் கன்னையா குமார். இவர் பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.
பெகுசராய் மாவட்டம் தஹியா கிராமத்தில் உள்ள பகவான்பூர் காவல் நிலையம் அருகே நிகழ்ச்சி முடிந்து கன்னையா குமார் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கன்னையா குமார் இருந்த காரின் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

இதுதொடர்பாக, இரு தரப்பினரும் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜே.என்.யு. மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #KanhaiyaKumar
Next Story






