என் மலர்

  செய்திகள்

  பீகார் முதல் மந்திரி மீது செருப்பை வீசிய வாலிபருக்கு தர்ம அடி
  X

  பீகார் முதல் மந்திரி மீது செருப்பை வீசிய வாலிபருக்கு தர்ம அடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது செருப்பை வீசிய இளைஞருக்கு அவரது கட்சியினர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். #Nitishkumar
  பாட்னா:

  பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள பாபு சபாகர் மைதானத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்ர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியின் போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென நிதிஷ்குமாரை நோக்கி செருப்பை வீசினார். அதிர்ஷ்டவசமாக செருப்பு அவர்மீது படாமல் கூட்டத்தில் விழுந்தது.  இந்த தாக்குதலை கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் சந்தன் என்பதும், பாரபட்சமான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதுபோன்று நடந்து கொண்டதாகவும் தெரிய வந்தது. #Nitishkumar
  Next Story
  ×