search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் சந்திபு
    X

    ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் சந்திபு

    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி இருவரும் ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினர். #VladimirPutin #PMModi #S-400
    புதுடெல்லி :

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். ரஷ்ய அதிபர் புதினை அரசு மரியாதையுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.

    இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் ரஷியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்பில் இந்தியா ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. குறிப்பாக 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு எஸ்-400 எனும் வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    முன்னதாக ரஷியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகளின் மீது பொருளாதார தடைவிதிக்கப்படும் என நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் புதின் - மோடி சந்திப்பு சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது. #VladimirPutin #PMModi #S-400
    Next Story
    ×