search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் ரோஹிங்கியா அகதிகள் 5 பேர் கைது
    X

    கேரளாவில் ரோஹிங்கியா அகதிகள் 5 பேர் கைது

    மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கேரள மாநில போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #VizhinjamPolice #Rohingyafamily
    திருவனந்தபுரம்:

    மியான்மர் நாட்டில் நடந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு, உயிர் பயத்தால் அங்கிருந்து வெளியேறிய சுமார் 10 லட்சம்  ரோஹிங்கியா மக்களில் 7 லட்சம் பேர் அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மேலும் பலர் இந்தியா உள்ளிட்ட நாடுகளில்  அடைக்கலம் அடைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நாடுகளில் அவர்கள் அகதிகளாக மட்டும் வாழ இயலும். எந்த நாட்டிலும் குடிமக்களாக உரிமை பெற முடியாது.
     
    இந்தியாவின் ஐதராபாத் நகரில் மட்டும் சுமார் 4 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர். அவர்களில் சில அகதிகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 ரோஹிங்கியா அகதிகள் ரெயில் மூலம் கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் வந்துள்ளனர்.

    அங்கிருந்து கடலோர நகரமான விழிஞ்சம் பகுதிக்கு ரிக்‌ஷா மூலம் சென்று கொண்டிருந்த அவர்களை இன்று சந்தேகத்தின் பேரில் மடக்கி கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஐ.நா.சபை அகதிகள் முகமையால் அளிக்கப்பட்ட அடையாள அட்டைகளை வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #VizhinjamPolice  #Rohingyafamily  
    Next Story
    ×