search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம் - மத்திய தகவல் ஆணையம் அதிரடி
    X

    தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம் - மத்திய தகவல் ஆணையம் அதிரடி

    தனியார் அமைப்பு என்பதால் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என கூறிவந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவந்து அதிரடி காட்டியுள்ளது மத்திய தகவல் ஆணையம். #CIC #BCCI #RTI
    புதுடெல்லி :

    இந்திய கிரிக்கெட் வாரியம் அரசு சாரா ஒரு தனியார் அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்திய வீரர்கள் மூவர்ண நிறம் தாங்கிய சீருடையை அணிந்து, அசோகா சக்கரம் பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டுடன் இதுநாள்வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

    கிரிக்கெட்டை பொருத்தவரை தேசத்தின் பிரதிநிதியாக இருக்கும் இவர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகம் தொடர்பாக கேள்வி எழுப்பும் பட்சத்தில் தாங்கள் தனியார் அமைப்பு எங்களைக் கட்டுப்படுத்த முடியாது, கேள்விக்குப் பதில் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் இல்லை எனத் தெரிவித்து நழுவி வந்தனர்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் கொண்டுவந்து அதிரடி காட்டியுள்ளது மத்திய தகவல் ஆணையம். இதனால், கிரிக்கெட் வீரர்களின் ஊதியம், வாரியத்தின் ஆண்டு வருமானம், வீரர்கள் தேர்வு செய்யும் முறை பற்றிய பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

    மற்ற தேசிய விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் கிரிக்கெட் வாரியத்தையும் ஏன் அதற்கு உட்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பிய சட்ட ஆணையம், 1997-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் இருந்து ரூ.2,168 கோடிக்கு வரிச்சலுகை பெற்றிருப்பதை குறிப்பிட்டு, வாரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்த நிலையில் மத்திய தகவல் ஆணையம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CIC #BCCI #RTI
    Next Story
    ×