என் மலர்

  செய்திகள்

  சிறையில் இருக்கும் தாய்களை குழைந்தைகள் வாரம் மூன்று முறை சந்திக்க மேனகா காந்தி பரிந்துரை
  X

  சிறையில் இருக்கும் தாய்களை குழைந்தைகள் வாரம் மூன்று முறை சந்திக்க மேனகா காந்தி பரிந்துரை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறையில் இருக்கும் தாய்க்கும், குழந்தைக்கும் தொடர்பு இல்லாமல் போவதை தவிற்க அவர்கள், வாரம் 3 முறை சிறையில் சந்திக்க உள்துறை அமைச்சகத்துக்கு மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். #ManekaGandhi
  புதுடெல்லி :

  சிறைச்சாலைகளில் குழந்தை பெற்றெடுக்கும் தாய்கள் அல்லது குழந்தை உள்ள பெண்களை சிறையில் அடைக்கும் போது ஐந்து வயது வரை குழந்தைகளை அவர்கள் சிறைக்குள் வைத்திருக்க முடியும்.  ஐந்து வயதை தாண்டிய குழந்தைகள் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகங்களில் சேர்த்து விடப்படுவர்.

  அவ்வாறு காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கும், சிறை நிர்வாகத்துக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்படு விடுகிறது. இதன் காரணமாக, சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் தாயும், குழந்தையும் மீண்டும் ஒன்று சேர முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.

  தாயை பிரிந்த குழந்தைகள் தவறான பாதையை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது. இது தவிர சில பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலமும் நடைபெறுகிறது.

  இதற்கெல்லாம் காரணம், சிறையில் உள்ள தாய்க்கும் குழந்தைகும் இடையே தொடர்பு இல்லாமை என சில தரவுகளின் அடிப்படையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை  அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

  எனவே இதுபோன்ற செயல்களை தவிற்கும் பொருட்டு, காப்பகத்தில் உள்ள குழந்தைகள்  வாரம் மூன்று முறை சிறையில் உள்ள அவர்களின் தாயை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். #ManekaGandhi
  Next Story
  ×