என் மலர்

  செய்திகள்

  நித்யானந்தாவை கைது செய்ய தடை
  X

  நித்யானந்தாவை கைது செய்ய தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலியல் பலாத்கார வழக்கில் நித்யானந்தாவை கைது செய்ய கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. #Nithyananda
  பெங்களூரு:

  கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம், பிடதியில் நித்தியானந்தா ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் எழுந்தது. இதையடுத்து ராமநகர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநகர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

  இந்த வழக்கு விசாரணையின் போது நித்தியானந்தா ஆஜராகவில்லை. இதை அடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநகர் கோர்ட்டு உத்தரவிட்டது. தனக்கு எதிரான பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்தியானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த வழக்கு விசாரணையின்போது நித்தியானந்தாவை கைது செய்ய வேண்டாம் என்று வாய்மொழியாக அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

  Next Story
  ×