search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் பெட்ரோல், டீசல் மீதான விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைத்து சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
    X

    ஆந்திராவில் பெட்ரோல், டீசல் மீதான விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைத்து சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், ஆந்திராவில் அதன் மீதான விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். #PetrolDieselPriceHike #FuelPriceHike #ChandraBabuNaidu
    அமராவதி:

    நாடு முழுவதும் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சாமானியர்களின் கழுத்தை நெறிக்கும் விலை உயர்வு குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. 

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே கூறும் நிலையில் அரசு உள்ளது.



    பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், மாநில அரசுகள் தங்களின் வருவாய் பாதிக்கும் என்பதால் இதனை ஏற்க மறுக்கிறது. மேலும், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாகவும், நாளை காலை முதல் புதிய விலை அமலாகும் எனவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அறிவித்துள்ளார். மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு வசூலிக்கும் வரியை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    ஆந்திராவில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×