என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவுரங்கசிப் பாணியில் அப்பாவின் முதுகில் குத்தியவர் - அகிலேஷ் யாதவ் மீது யோகி ஆதித்யநாத் பாய்ச்சல்
    X

    அவுரங்கசிப் பாணியில் அப்பாவின் முதுகில் குத்தியவர் - அகிலேஷ் யாதவ் மீது யோகி ஆதித்யநாத் பாய்ச்சல்

    ஷாஜஹானை சிறையில் வைத்துவிட்டு ஆட்சியை பிடித்த அவுரங்கசிப் பாணியில் முலாயம் சிங் யாதவ் முதுகில் குத்திவிட்டு அகிலேஷ் யாதவ் கட்சியை பிடித்து விட்டதாக யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். #Yogi #Akhilesh #Aurangzeb
    லக்னோ:

    லக்னோ நகரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கருத்தரங்கில் உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பங்கேற்று பேசினார். 

    அப்போது, முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை மறைமுகமாக தாக்கிப் பேசிய அவர், தனது சுயநலத்துக்காக தந்தையையும் மாமாவையும் முதுகில் குத்திய அகிலேஷ் யாதவ் சரியான சந்தர்ப்பவாதி என்று குற்றம் சாட்டினார்.

    இந்தியாவில் இருப்பவர்கள் யாரும் தங்கள் மகன்களுக்கு அவுரங்கசிப் என்று பெயர் வைப்பதில்லை. ஏனென்றால், அரியாசனத்தை பிடிப்பதற்காக தனது தந்தை ஷாஜஹானை ஆயுள் தண்டனை கைதியாக்கி சிறையில் அடைத்தவர் அவுரங்கசிப் என்பதால் இதற்கு யாரும் தயாராக  இல்லை. 

    சொந்த தந்தையையும், மாமாவையும் முதுகில் குத்திவிட்டு கட்சியை பிடித்தவர் மக்களுக்காக எதுவும் செய்துவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். #Yogi #Akhilesh #Aurangzeb
    Next Story
    ×