என் மலர்
செய்திகள்

பூட்டானில் இருந்து கடத்தி வந்த ரூ.5.4 கோடி தங்கம் பறிமுதல்
பூட்டானில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இருவரை கைது செய்தனர். #20kggold #20kggoldseized
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதி வழியாக அண்டைநாடான பூட்டானில் இருந்து சிலர் ஏராளமான தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதை தொடர்ந்து, நேற்று மாலை சிலிகுரி மாவட்டத்தில் உள்ள சேவோக் ரோடு பகுதியில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 கிலோ கடத்தல் தங்கத்தை ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்தனர்.
இன்று உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரையும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி அனுமதி அளித்தார். #20kggold #20kggoldseized
Next Story






