என் மலர்

  செய்திகள்

  ஜம்மு காஷ்மீரில் ஈத்கா மைதானம் அருகே போலீஸ்காரர் சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் வெறிச்செயல்
  X

  ஜம்மு காஷ்மீரில் ஈத்கா மைதானம் அருகே போலீஸ்காரர் சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் வெறிச்செயல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்ரீத் தொழுகை நடைபெற்ற ஈத்கா மைதானம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். #JKMilitantsAttack #JKPoliceShotDead
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரில் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு ராணுவம் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கைகள்  மேற்கொண்டு வருகின்றனர். எனினும், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. பக்ரீத் திருநாளான இன்றும் பயங்கரவாதிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.

  குல்காம் மாவட்டம் ஜாஸ்ரிபோரா பகுதியில் பக்ரீத் விழா நடைபெற்ற ஈத்கா மைதானத்திற்கு வெளியே காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் விரைந்தனர்.  இதேபோல் ஸ்ரீநகரில் ஒரு கும்பல் திடீரென பாகிஸ்தான் தேசிய கொடிகளையும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கொடிகளையும் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து முழக்கங்கள் எழுப்பினர். முகத்தை மறைத்துக்கொண்டு வந்த அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. #JKMilitantsAttack #JKPoliceShotDead
  Next Story
  ×