என் மலர்
செய்திகள்

அனுபம் கெர் மற்றும் ரத்னாகர் கட்டே
மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ரத்னாகர் கைது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துவரும் இயக்குநர் விஜய் ரத்னாகர் கட்டே ஜி.எஸ்.டி வரி முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். #TheAccidentalPrimeMinister
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு ‘தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. பாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குநர் அனுபம் கெர், இந்த படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் ஒரு காட்சி
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநரான விஜய் ரத்னாகர் கட்டே ஜி.எஸ்.டி மோசடியில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்னாகர் நடத்தி வரும் விஜிஆர் டிஜிட்டல் என்ற நிறுவனத்தில் போலி பில்களை சமர்பித்து 34 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story






