என் மலர்
செய்திகள்

ராஜீவ் காந்தி சத்பாவனா விருதுக்கு மகாத்மா காந்தியின் பேரன் தேர்வு
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் வழங்கப்படும் ராஜீவ் காந்தி சத்பாவனா விருதுக்கு மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #RajivGandhiSadbhavanaAward #GopalkrishnaGandhi
புதுடெல்லி:
இந்த ஆண்டு ராஜீவ் காந்தி சத்பாவனா விருது வழங்குவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்திக்கு, ராஜீவ் காந்தி சத்பாவனா விருது வழங்குவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அவரது ஒப்பற்ற சமூக சேவையை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24-வது முறை வழங்கப்படும் ராஜீவ் காந்தி சத்பாவனா விருதுக்கான நிகழ்ச்சி ஆகஸ்ட் 20-ம் தேதி ஜவஹர்பவனில் கோலாகலமாக நடைபெறும் எனவும் தெரியவந்துள்ளது. #RajivGandhiSadbhavanaAward #GopalkrishnaGandhi
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி சத்பாவனா விருது வழங்கப்படுவது வழக்கம். சிறந்த சமூக தொண்டு செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
இதற்கு முன்னதாக அன்னை தெரசா, உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான், முகமது யூனுஸ், லதா மங்கேஷ்கர் போன்ற பல சிறப்பு மிக்கவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

Next Story